தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஆப்கன் அதிபர் அழைப்பு

தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஆப்கன் அதிபர் அழைப்பு
Updated on
1 min read

தலிப்பான்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.

காபூலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, 23 நாடுகளை ஒன்று திரட்டப்பட்டு நடத்தப்பட்ட கருந்தரங்க நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நேட்டோ படைகள் குறித்து அதிபர் அஷ்ரப் கனி விவாதித்தார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் 16 ஆண்டுகளாக கிளர்ச்சி செய்து வரும் தாலிபன்கள் தங்களது நாச நடவடிக்கைகளை நிறுத்தி கொண்டு அரசுடன் அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்க அழைப்பதாகவும் இதுவே அவர்களுக்கான இறுதி வாய்ப்பு என்றும் கானி தெரிவித்தார்.

முன்னதாக தாலிபன்களுடன் ஆப்கானிஸ்தான் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறும்வரை ஆப்கன் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லை என்று தாலிபன்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in