

தெற்கு சூடானில் யூனிட்டி மற்றும் ஜோங்லி ஆகிய இரு மாகாணங்களில் அவசரநிலையை அதிபர் சல்வா கிர் பிரகடனம் செய்துள்ளார். இது தொடர்பாக சீன அரசின் செய்தி நிறுவனம் ஜின்குவா செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். முன்னாள் துணை அதிபர் ரிக் மார்ச்சர், பழங்குடி யினரை ஒன்று திரட்டிப் போராடி வருகிறார். கடந்த சில வாரங்களாக தெற்கு சூடான் கலவரபூமியாக மாறியி ருக்கிறது. இதனால் யூனிட்டி மற்றும் ஜோங்லி பகுதிகளில் நிலை மையைக் கட்டுக்குள் கொண்டு வர அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கிளர்ச்சியாளர் களுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த எத்தியோப் பியா வெளியுறவுத்துறை மத்தியஸ்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருதரப்புக் கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் முக்கியப் பங்கு வகிக்கும் எனத்தெரிகிறது.
தெற்கு சூடானில் தின்கா மற்றும் நூயெர் என இரு பழங்குடி இனத்தவர்கள் உள்ளனர். இவர் களுக்கு இடையேதான் மோதல் ஏற்பட்டுள்ளது. அதிபர் சல்வா கிர் தின்கா இனத்தைச் சேர்ந்தவர். துணை அதிபராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட மாச்சார் நூயெர் இனத்தைச் சேர்ந்தவர்.