

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் பலியா னோர் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக கொண்டு நேற்றுமுன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 8.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பேரழிவுகள் நேரிட்டுள்ளன.
பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 7 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலஅதிர்வுகள் நேற்றும் நீடித்தன. பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.
நிலநடுக்க பீதியால் அப்பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக் குச் செல்ல அஞ்சுகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை, தெருக்களில் படுத்து தூங்கினர்.
தலைநகர் இஸ்லாமாபாத் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. நிலநடுக்க பீதி காரணமாக ஹோட்டல்கள், கடைகளில் பொது மக்கள் கூட்டம் இல்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கோதுமை, தற்காலிக கூடாரங்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் ஹெலிகாப்டர்களில் இருந்து உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களும் போடப்படுகின்றன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பல்வேறு பகுதி களில் இரவு பகலாக மீட்புப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நவாஸ் ஷெரீப் மீட்புப் பணிகளை தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.
பாகிஸ்தான் முழுவதும் இதுவரை 250w பேர் உயிரிழந்திருப் பதாக அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் அதிகாரபூர் வமாக அறிவித்துள்ளன. ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்து ள்ளனர். இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானின் 34 மாகா ணங்களில் 12-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் நிலநடுக்கத்தால் சீர்குலைந்துள்ளன. பாதாக்சான், தஹார், நன்கர்ஹார், குன்னார் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இவை தலிபான் தீவிர வாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் உயிரிழப்புகள் குறித்து தெளிவான தகவல் இல்லை.
எனினும் ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், சுமார் 80 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
இந்தியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ் தான், உஸ்பெஸ்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால் அந்த நாடு களில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
கடந்த மே மாதம் நேபாளத் தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக் கங்களால் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் வீடு, உடைமை களை இழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் தெற்காசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள் ளது.
இந்தியா உதவி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான் அரசுக்கு தேவையான அனைத்து உதவி களையும் வழங்க தயாராக இருப்ப தாக மோடி உறுதியளித்தார்.
இதேபோல் ஆப்கானிஸ் தானுக்கும் அனைத்து உதவிகளை யும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.
ஐ.நா. உதவி
பாகிஸ்தான், ஆப்கானிஸ் தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந் தோர் குடும்பங்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. சபை வழங்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.நா. பிரதிநிதிகள் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.