Published : 01 Jul 2016 10:06 AM
Last Updated : 01 Jul 2016 10:06 AM

‘ஃப்யூச்சர் ஷாக்’ நூலை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் டோஃப்ளர் மறைவு

உலகை உலுக்கிய ‘ஃப்யூச்சர் ஷாக்’ (Future Shock) என்ற அற்புத மான புத்தகத்தை எழுதிய அமெ ரிக்க எழுத்தாளர் ஆல்வின் டோஃப் ளர் (Alvin Toffler) தனது 87-வது வயதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாள்களுக்கு முன்னால் காலமானார்.

தொழில்நுட்ப வளர்ச்சி காரண மாக தனி நபர்களும் சமூகமும் அடையும் உளவியல் நிலையைத் தான் அவர் ‘எதிர்கால அதிர்ச்சி’ என்கிறார். அவருடைய புத்தகம் ஆங்கிலத்தில் மட்டும் 60 லட்சம் பிரதிகளுக்கு மேல் பலமுறை பதிப்பாகி விற்றுக் கொண்டிருக் கிறது. திரைப்படமும் தயாரானது. பல மொழிகளிலும் மொழி பெயர்ப் பாகிறது.

“உலக சமுதாயம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சமூகம் - வேளாண் சமூகம், தொழில்மய சமூகம், அதி நவீன (சூப்பர்) தொழில்மய சமூகமாக மாறும். அதிவேகமாக மாறும் தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக மாற்றமும் மக்களை அதற்குத் தொடர்பில்லாதவர்களாகவும் பாதிக்கப்படுவோராகவும் மாற்றி விடும். சமூகம் இப்போது அனு பவித்துவரும் துயரங்கள் உண்மை யில் துயரங்கள் அல்ல, இனி வரப் போவது தொடர்பான அறிகுறி களே! ‘மிதமிஞ்சிய தகவல்கள்’ தலைக்கேறப்போகின்றன” என்றார். இக் கருத்துகளை தி தேர்ட் வேவ், பவர்ஷிஃப்ட் என்ற அடுத்த புத்தகங்களில் விரிவுபடுத்தியிருக்கிறார்.

“புதிய இயந்திரம் என்பது அடுத்த தலைமுறை இயந்திரம் வந்தவுடன் காலாவதியாகிவிடும். கம்ப்யூட்டர்கள் அதன் முழு ஆயுள் காலத்துக்கு முன்னதாகவே பழையதாகிவிடும். ஏணி, திருமண உடை போன்றவற்றை சொந்தமாக வாங்குவதைவிட வாடகைக்கு எடுப்பதே மலிவு என்றாகிவிடும். ஒரு தொழில் பிரிவின் எல்லா கிளைகளும் காலாவதியாகி புதிய கிளைகள் வேறிடங்களில் ஏற் படும். முறையான தொழில் பயிற்சி யற்ற தொழிலாளர்கள் தொடர்ந்து புதுப்புது வேலைகளைக் கற்றுக் கொள்ள நேரும். தொழில்வள காலத்துக்குப் பிந்தைய காலத்தில் தொழிலையும் தொழில்செய்யும் ஊரையும் தொழிலாளர்கள் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருவரே தன் வாழ்நாளில் வெவ் வேறு வேலைகளைச் செய்து வருவார். பொறியாளர்களின் கல்வி அறிவு பத்தாண்டுகளில் பழையதாகிவிடும். மக்கள் மேலும் மேலும் தாற்காலிக வேலைகளையே செய்வார்கள்”

இப்படிப்பட்ட அவருடைய கருத்துகள் தொடர்ந்து பலித்து வருவதால் அவருடைய எழுத்து களுக்கு வரவேற்பு தொடரு கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x