பிணைக்கைதிகளை கொல்லும் சிறுவர்கள்: ஐ.எஸ். புதிய வீடியோவில் அதிர்ச்சி

பிணைக்கைதிகளை கொல்லும் சிறுவர்கள்: ஐ.எஸ். புதிய வீடியோவில் அதிர்ச்சி
Updated on
1 min read

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள், ஐந்து பிணைக் கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோவை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டினரை கழுத்தறுத்து கொலை செய்யும் வீடியோக்களை ஐ.எஸ். அமைப்பு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய வீடியோ ஒன்றை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.

அதில் குர்து படையைச் சேர்ந்த 5 பிணைக் கைதிகள் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு நிற்கின்றனர். அவர்களின் பின்னால் ஐ.எஸ். அமைப்பின் சீருடையில் 5 சிறுவர்கள் துப்பாக்கியுடன் நிற்கின்றனர்.

அந்த சிறுவர்கள் துப்பாக்கியை உயர்த்தியபடி அரபு மொழியில் ஆக்ரோஷமாக பேசுகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி எத்தனை நாடுகள் சேர்ந்து வந்தாலும் குர்துகளை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஒருவர்பின் ஒருவராக கூறுகின்றனர். பின்னர் 5 பிணைக்கைதிகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கின்றனர்.

வீடியோவில் தோன்றும் 5 சிறுவர்கள், பிரிட்டன், எகிப்து, துருக்கி, துனிசியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இதுதொடர்பாக அந்தந்த நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன.

உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து வருகின்றனர். சிரியா, இராக்கில் போரில் ஈடுபட்டுள்ள அவர்கள் அங்கேயே திருமணம் செய்து வாழ்கின்றனர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in