

வியட்நாமில் பறவைக் காய்ச்சல் நோய்க்கு இந்த ஆண்டில் 2-வது நபர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து டாங் தாப் மாநில முதன்மை மருத்துவ இயக்குநர் குயன் காக் கூறியதாவது:
மாநிலத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், காய்ச்சல் காரணமாக கடந்த ஜனவரி 28-ம் தேதி இறந்தார். பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான எச்5என்1 வைரஸ் தாக்குதலே அவரது இறப்புக்குக் காரணம் என ஆய்வில் தெரியவந்தது. ஏற்கெனவே, பின் புவாக் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது டைய ஒரு ஆண், பறவைக் காய்ச் சல் காரணமாக கடந்த ஜனவரி 18-ம் தேதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.