ஜப்பான் எல்லை அருகே பறந்த சீன போர் விமானங்கள்: இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு

ஜப்பான் எல்லை அருகே பறந்த சீன போர் விமானங்கள்: இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு
Updated on
1 min read

ஜப்பான் எல்லை அருகே சீன போர் விமானங்கள் அடிக்கடி பறக்கும் விவகாரம் இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் செனகு தீவு உள்ளது. இங்கு 8 தீவுகள் உள்ளன. அவை தற்போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ளன. இத்தீவுகளை சீனாவும் தைவானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்தப் பின்னணியில் அண்மைக் காலமாக செனகு தீவு அருகே சீன போர்க்கப்பல்கள் மிகவும் நெருங்கி வருவதும் சீன போர் விமானங்கள் ரோந்து சுற்றுவதும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் 199 முறை சீன போர் விமானங்கள் செனகு தீவுப் பகுதியில் அத்துமீறி பறந்துள்ளன.

கடந்த மே மாதம் முதல் சீன போர் விமானங்களின் அத்துமீறல் மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதாக ஜப்பானிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜப்பானிய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கூறியபோது, செனகு தீவுப் பகுதியில் சீன போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மிகவும் நெருங்கி வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அண்மைக்காலமாக சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்தனர்.

புதிய ஏவுகணை

சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தரையில் இருந்து கடல் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை தயாரிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பானிய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் கூறியபோது, தரையில் இருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவில் கடல் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம், இந்த ஏவுகணைகள் 2023-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in