

பிரிட்டன், ஸ்வீடன், இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளில் இணையதள தாக்குதல் (சைபர் அட்டாக்) நடத்தப் பட்டுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்களின் கணினி செயல் பாடுகள் முடங்கி உள்ளன. இவை மீண்டும் செயல்பட பிணைத் தொகை கேட்கப்படுகிறது.
ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நேற்று முன்தினம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை துறை மற்றும் முன்னணி மருத்துவமனைகளின் கணினிகள் முடங்கி உள்ளன.
இதனால், பிரிட்டனில் ஆம்பு லன்ஸ் உட்பட மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மூடப்பட்டுள் ளன. அவசர தேவையை தவிர்த்து, நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உள் நோயாளிகளில் சிலர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும்போது, “இது மருத்துவ துறையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. சர்வதேச அளவில் நிகழ்த்தப் பட்டுள்ள இத்தாக்குதலால் பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார். இதுபோல ஸ்பெயின் நாட்டின் தொலைதொடர்பு நிறுவனமான டெலிபோனிகாவின் கணினிகளும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து இணையதள பாது காப்பு மென்பொருள் நிறுவனமான அவாஸ்ட் வெளியிட்ட அறிக்கை யில், “இதுபோன்ற தாக்குதல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந் துள்ளது” கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ‘ரேன்சம் வேர்’ எனப்படும் வைரஸே காரணம் என தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் இதைத் திறந்ததும் அந்த கணினி செயல்பாடு முடங்கி விடுவவதாக வும் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் ஒரு மணி நேரத் துக்கு 50 லட்சம் பேருக்கு மின்னஞ் சல் மூலம் அனுப்பி வைக்கப் படுவதாக போர்ஸ்பாயின்ட் செக்யூரிட்டி லேப் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் ஆஸ்தி ரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுகல், ரஷ்யா, சீனா, இந்தியா, உக்ரைன், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் போர்ஸ் பாயின்ட் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தத் தாக்கு தலால் ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இதை அந்நாட்டு உள் துறை அமைச்சகமும் உறுதிப் படுத்தி உள்ளது.
இணையதள பாதுகாப்பு நிறுவ னமான கஸ்பர்ஸ்கி லேப், அமெரிக்க உள்துறையின் கீழ் இயங்கும் கணினி பாதுகாப்பு நிறுவனமும் (யுஎஸ்சிஆர்டி) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளன.
பிணைத் தொகை
பாதிக்கப்பட்ட கணினி திரை களில், “உங்கள் கோப்புகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. இதை நீக்குவதற்கு 300 டாலரை (ரூ.20,000) பிட்காயினாக (ஆன் லைன் கரன்சி) தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாது காப்பு முகமையில் (என்எஸ்ஏ) இதுபோன்ற மென்பொருள் ஏற் கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து திருடப்பட்ட மென்பொருளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங் களும் இத்துறை சார்ந்த நிபுணர் களும் இந்தத் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இத்தாலியின் பாரி நகரில், ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. சர்வதேச வங்கியி யல் நடைமுறை, பங்குச் சந்தைகள் உள்ளிட்டவற்றில் இணையதள தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இதில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உலகம் முழுவதும் இணையதள தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.