Published : 01 Sep 2014 08:31 AM
Last Updated : 01 Sep 2014 08:31 AM

பழமையான புத்த மத கோயில்களில் மோடி பிரார்த்தனை: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் சென்றார்

ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள புகழ்பெற்ற தோஜி, கின்காஹுஜி புத்த மத கோயில்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார்.

ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பா னுக்கு சென்றார். முதல்நாளில் அவர் புராதன நகரமான கியோட் டோவில் தங்கினார். அங்கு அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார்.

அப்போது கியோட்டோவை போன்று வாரணாசியையும் கலாச் சார நகரமாக உருவாக்கும் “ஸ்மார்ட் சிட்டி” ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத் தானது.

2000 கோயில்கள் நிறைந்த கியோட்டோ

மன்னராட்சி காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஜப்பானின் தலைநகராக கியோட்டோ விளங் கியது. அங்கிருந்துதான் டோக்கி யோவுக்கு தலைநகரம் மாற்றப் பட்டது. ஜப்பானிய மக்கள் ஷிண்டோ மதத்தையும் புத்த மதத்தையும் பின்பற்றி வருகின்ற னர். கியோட்டோ நகரில் இரு மதங்களையும் சேர்ந்த சுமார் 2000 கோயில்கள் உள்ளன.

இதில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோஜி புத்த மத கோயிலை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சென்றார். இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து கோயிலில் பிரார்த்தனை நடத்தினர்.

நான் மோடி; நீங்கள் மோரி

கோயிலின் தலைமை புத்த பிட்சு மோரி, இரு பிரதமர்களையும் வரவேற்று கோயில் வளாகத்தை சுற்றிக் காட்டினார். அப்போது தலைமை புத்த பிட்சுவிடம் தன்னை அறிமுகப்படுத்திய இந்தி யப் பிரதமர், “நான் மோடி, நீங்கள் மோரி, நமக்குள் பெயர் பொருத் தம் மிகவும் கச்சிதமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். மோடியின் நகைச்சுவை உணர்வை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

தோஜி கோயிலின் மூத்த பிட்சு ஹசி நிருபர்களிடம் பேசிய போது, ‘இந்தியப் பிரதமர் மோடி கோயிலுக்கு வந்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்றார்.

கோயிலில் பிரார்த்தனை

இதைத் தொடர்ந்து கியோட்டாவின் கின்காஹுஜி புத்த மத கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கோயிலில் மோடி பிரார்த்தனை செய்தார். கோயிலின் வரலாறு குறித்து புத்த மத பிட்சுகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். இரு கோயில்களின் வளாகத்திலும் பெருந்திரளான இந்தியர்கள் கூடி மோடியை வர வேற்றனர். அவர்களுடன் மோடி உரையாடினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

விஞ்ஞானியுடன் சந்திப்பு

சிக்கிள் செல் அம்னீசியா நோய் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நோபல் பரிசு விஞ்ஞானி யமனாகாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ யமனாகா உறுதி அளித்தார்.

டோக்கியாவில் மோடி

ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்கு பிரதமர் ஷின்சோ அபேவை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, உள்கட்டமைப்பு, கனிம வளங்கள் ஏற்றுமதி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x