Published : 12 Sep 2018 06:12 PM
Last Updated : 12 Sep 2018 06:12 PM

அமெரிக்காவை வெறுப்பெற்ற சீனா, ரஷ்யாவுடன் கூட்டு சேரும் ஈரான்

தொடர்ந்து அமெரிக்காவால் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகி வரும் ஈரான் அதிலிருந்து மீள சீனாவின் உதவியை எதிர்நோக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் இயங்கி வரும் RAND அமைப்பிலுள்ள அரசியல் அறிஞர் ஆரியானே தபதபாய் (இவர் சமீபத்தில் எழுதிய புத்தகம் ஒன்றில்  ஈரான் விரைவில் சீனா, ரஷ்யாவுடன் கைக்கோர்க்கும் என்று குறிப்பிட்டிருந்தார்)  கூறும்போது, "பொருளாதார சரிவிலிருந்து மீள ஈரான் சீனாவின் உதவியை கோரவுள்ளது. விரைவில் நாம் அதனை காண இருக்கிறோம். ஆனால் ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவி புரிய சீனா நிபந்தனைகளை விதிக்கக் கூடும்” என்று கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்து வருகிறார்.

மேலும் ஈரான்னுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்  எனவும் ட்ரம்ப் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x