Published : 19 Sep 2018 10:07 AM
Last Updated : 19 Sep 2018 10:07 AM

மியான்மர் ராணுவ உயரதிகாரிகளிடம் சர்வதேச விசாரணை மேற்கொள்ளலாம்: ஐ.நா. அறிக்கையில் பரிந்துரை

மியான்மரில் ரோஹிங்கியா முஸ் லிம்கள் படுகொலை செய்யப்பட் டது தொடர்பாக அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகளிடம் சர்வ தேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. அறிக்கை யில் பரிந்துரை செய்யப்பட்டுள் ளது.

மியான்மரில் சிறுபான்மையின ராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக அங்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அத்துடன், ரோஹிங்கியா இனத்தவர் மீது மியான்மர் ராணுவத்தினரும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், லட்சக்கணக்கான ரோஹிங் கியாக்கள் பலியாகினர். 7 லட்சத்துக் கும் மேற்பட்டோர் அகதிகளாக வங்கதேசத்திலும், இந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் மிகுந்த அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக ஐ.நா. புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஒரு வருடகாலம் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஐ.நா. தற்போது வெளியிட்டுள்ளது. 449 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மியான்மரில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் அந்நாட்டு ராணுவத்தின் பங்கு கணிசமாக உள்ளது. இது ஒரு இனப் படுகொலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இந்தப் படுகொலை தொடர்பாக அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி மின் ஆங் லெய்ங் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகளிடம் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. அந்நாட்டு அரசாங்கத் தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அங்கு ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. உதாரண மாக, மியான்மர் நாடாளுமன்றத் தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தினரிடம் உள்ளன. அதேபோல், உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகிய அமைச்சகங்களும் ராணுவத்தின் வசம் இருக்கின்றன. இது அந்நாட்டின் மக்களாட்சித் தத்துவத்துக்கு ஆபத்து விளை விப்பதாகும். ஆதலால், மியான்மர் அரசியலில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x