Published : 01 Sep 2018 09:06 AM
Last Updated : 01 Sep 2018 09:06 AM

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை: பிம்ஸ்டெக் மாநாட்டு தீர்மானத்தில் வலியுறுத்தல்

மனிதக் குலத்துக்கு பெரும் அச் சுறுத்தலாக விளங்கி வரும் தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து அவற்றை ஊக்குவிக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிம் ஸ்டெக் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டு வில் பிம்ஸ்டெக் ஒத்துழைப்பு மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. பிம்ஸ்டெக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, பூடான், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடு களின் தலைவர்கள் இந்த மாநாட் டில் பங்கேற்றனர். இதில், இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேற்று முன்தினம் உரையாற்றினார்.

இந்நிலையில், இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று, பிம் ஸ்டெக் தீர்மானப் பிரகடனம் வெளி யிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள் ளதாவது:

மனிதக் குலத்துக்கும், உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத் தலாக தீவிரவாதம் விளங்கி வருகிறது. பிம்ஸ்டெக் நாடுகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, உலகில் செயல்பட்டு வரும் அனைத்து வடிவிலான தீவிரவாதத்துக்கும், அவற்றின் நடவடிக்கைகளுக்கும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பு அல்லது தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மட்டுமல்ல. மாறாக, தீவிரவாதத் துக்கு ஆதரவளித்து அவற்றுக்கு புகலிடம் கொடுத்து வரும் நாடு களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே, முதலில், அதுபோன்ற நாடுகளை அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்த வேண் டும்.

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டுமெனில், முதலில் அவற் றுக்கு நிதியுதவி கிடைக்கப் பெறு வதை தடுக்க வேண்டியது முக் கியம். இதுதவிர, தங்கள் பகுதி களில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குதல், அந்த அமைப்புகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதைத் தடுத்தல் உள் ளிட்ட நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண் டும். குறிப்பாக, இந்த நடவடிக்கை களில் பிம்ஸ்டெக் நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தீவிரவாதம் மற்றும் எல்லைத் தாண்டிய குற்றச் சம்பவங்கள் ஆகியவற்றை பூண்டோடு ஒழிக்க பிம்ஸ்டெக் நாடுகள் உறுதிப்பூண் டுள்ளன. மேலும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒருங் கிணைந்து செயல்ட வேண்டியதன் அவசியத்தையும் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் உணர்ந்துள்ளன. இதற்காக, பிம்ஸ்டெக் நாடுகளின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், பிம்ஸ்டெக் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

பிம்ஸ்டெக் நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் இருந்து வரும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் வெளிப்படையான மற்றும் உறுதியான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே பாலமாக செயல்படும் வகையில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண் டும். இவ்வாறு அந்தத் தீர்மான பிரகடனத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மோடி ஆலோசனை

பிம்ஸ்டெக் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர் களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே ஆலோசனை நடத் தினார். இதில், தாய்லாந்து பிரத மர் பிரயுத் சான் -ஓ - சா உடனான சந்திப்பு ஆக்கப் பூர்வமானதாக வும், பயனுள்ளதாகவும் இருந்ததாக மோடி தனது ட்விட்டரில் பதிவிட் டுள்ளார்.

அதேபோல், மியான்மர் அதிபர் வின் மின்ட் மற்றும் பூடான் அரசின் தலைமை ஆலோசகர் டேஷோ ஷெரிங் ஆகியோருடனும் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, இரு தரப்பு நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x