Published : 13 Sep 2014 09:29 AM
Last Updated : 13 Sep 2014 09:29 AM

உலகின் உயரமான நாய் இறப்பு

உலகின் உயரமான நாய் என்று புகழ்பெற்ற ‘கிரேட் டேன்' வகை நாய் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இறந்தது. அதன் வயது 5 ஆகும்.

கெவின் டூர்லாங் என்பவருக்குச் சொந்தமான அந்த நாயின் பெயர் சீயஸ் என்பதாகும். இதன் முன்னங்கால்கள் 44 அங்குல உயரம். பின்னங்கால்கள் மூலம் நின்றால் 7 அடி 4 அங்குல உயரம் இருக்கும். இந்த அசாதாரணமான உயரத்தால் இது 2012ம் ஆண்டு உலகின் உயரமான நாய் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

இதனுடைய எடை 75 கிலோகிராம் ஆகும். எனவே இது இரண்டு வாரங்களுக்கு 13.6 கிலோகிராம் எடை உணவை உட்கொண்டு வந்தது. தன்னுடைய உயரத்தால் புகழ்பெற்ற இந்த நாய் உள்ளூரில் பள்ளிக் குழந்தைகளைச் சந்தோஷப் படுத்தியும், மருத்துவமனைகளில் நோயாளிகளை மகிழ்விக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x