எபோலா நோய்க்கு ஸ்பெயினில் மேலும் ஒரு பாதிரியார் உயிரிழப்பு

எபோலா நோய்க்கு ஸ்பெயினில் மேலும் ஒரு பாதிரியார் உயிரிழப்பு

Published on

எபோலா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஸ்பெயின் பாதிரியார் உயிரிழந்தார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பாதிப்பு அதிகமாக உள்ள லைபீரியா, சியேரா லியோன், கினியா, லைஜீரியா ஆகிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் மருத்துவர்களும் செவிலியர்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயதான ஸ்பெயின் பாதிரியார் கார்ஸியா வியேஜோ வியாழக்கிழமை மேட்ரிடில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முன்னதாக, லைபீரியாவில் அரசு சாரா நிறுவனத்திற்காக பணியாற்றியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மிகுவல் பராஜஸ் சிகிச்சை பலனின்று கடந்த மாதம் இறந்தது நினைவுகூரத்தக்கது,

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in