

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஞாயிற்றுக்கிழமையன்று தெற்கு சூடானில் மத்தியப் பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று புகைமூட்டம் காரணமாக தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் விமான ஓட்டிகள் உட்பட அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகினர். நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து மாகாண அமைச்சர் அபேல் அகுக் கூறும்போது, "விபத்துக்குள்ளான விமானம் தலைநகர் ஜுபாவிலிருந்து இரோல் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது வழித்தடத்தில் பனிமூட்டம் காரணமாக விமானம் தடுமாறி விபத்துக்குள்ளாகியது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது.