

தென் கொரியாவில் ஏப்ரல் 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரியாவின் சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் திடீரென மூழ்கியது. அவசர உதவி கோரி கப்பலில் இருந்து வெளியான சமிக்ஞையை பார்த்து மீட்புக்குழுவினர் விரைந்தனர். அதற்குள் கப்பல் பாதியளவு மூழ்கிவிட்டது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 130 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பள்ளி இன்னும் 170 பேர் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.