

பசுபிக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (திங்கட்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''பசுபிக் பெரு கடலில் தென் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 562 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
பசுபிக்கின் ரிங் ஆஃப் பயர் பகுதியில்தான் இந்த பிஜி தீவு அமைந்துள்ளது. இதன் காரணமாக் கண்டப் பெருந்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அதி ஆற்றலை வெளிப்படுத்தும் பகுதியாக இது கருதப்படுகிறது.
முன்னதாக பிஜி தீவில் கடந்த மாதம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.