

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு தரப்பில், ''சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் 7 குழந்தைகள் உட்பட பொது மக்கள் 14 பேர் பலியாகினர்.
மேலும் மாரெட் அல் நோமன் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே குறிவைத்து பொதுமக்கள், பள்ளிகள், மருத்துவமனைகளைத் தாக்குகின்றன .
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சுமார் 26 மருத்துவ சுகாதார நிலையங்கள் இட்லிப் மாகாணத்தில் தாக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியிருந்த நிலையில் மீண்டும் பொதுமக்களையும், குழந்தைகளையும் அரசுப் படைகள் தாக்கின.