கிணறுகள் வறண்டுவிட்டன; மழை மட்டுமே சென்னையை காக்க முடியும்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆதங்கம்

கிணறுகள் வறண்டுவிட்டன; மழை மட்டுமே  சென்னையை காக்க முடியும்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆதங்கம்
Updated on
1 min read

கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. தென்னிந்திய நகரமான சென்னையை மழைமட்டுதான் இந்த சூழ்நிலையில் காக்கமுடியும் என்று ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான  லியானார்டோ டிகாப்ரியோ வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான  குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் நீர் வேண்டி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு விட்டதால் கடந்த சில வருடங்களில் இல்லாத அளவுக்கு தண்னீர் பஞ்சத்தை தமிழகம் எதிர்க் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையின் நிலவும் கடும் தண்ணீர்  பஞ்சம் தேசிய அளவுவில் எதிரொலித்தது மட்டுமில்லாமல்.  சர்வதேச அளவிலும் பேசப்படடுள்ளது.

சென்னை குடி நீர் தட்டுப்பாடு குறித்து ஹாலிவுட் நடிகரும்,சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ  இஸ்ஸ்டாகிராம் பக்கத்தில்,

”மழை மட்டும்தான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் சென்னையை காக்க முடியும் , கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. தென் இந்தியாவின் முக்கிய நகரமான சென்னைக்கு  நீர் ஆதராமாக உள்ள நான்கு நீர் நிலைகளும் முற்றிலுமாக வறண்டுவிட்டன. சென்னைவாசிகள் குடிநீருக்காக  நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

நீர் நிலைகள் குறைந்துவிட்டதால், ஹோட்டல்களும் உணவகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் தொடர்ந்து  தண்ணீருக்காக மாற்று வழிகளை தேடி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து அந்த சமூகம் தண்ணீருக்காக வேண்டி வருகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in