

சிரியா அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் 16 குழந்தைகள் உள்பட 42 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் சராகுவெப் நகரின் மீது ஞாயிற்றுக்கிழமை அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல எஹ்சிம் நகரில் நடந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இரு தாக்குதலும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்கும் இட்லிப் மாகாணத்துக்கு உட்பட்டதாகும். இந்த தாக்குதல்களில் இறந்தவர்கள் அனைவரும் போருக்கு அஞ்சி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.