Published : 26 Jun 2019 08:15 AM
Last Updated : 26 Jun 2019 08:15 AM

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் வைத்திருந்த 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம் போனது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சீனாவுக்கு சுற்றுப் பயணம் சென்று திரும்பியபோது ஒரு வெண்கலக் கிண்ணத்தை வாங்கி வந்துள்ளனர். அழகிய வேலைப்பாடுள்ள அந்தக் கிண்ணம் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதை பெர்லினில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால், அருங்காட்சியக நிர்வாகம் அதை காட்சிக்கு வைக்க ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த ஏல நிறுவனத்திடம் விற்கவும் சுவிஸ் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். ஏல நிறுவனமும் அந்தக் கிண்ணத்தை வாங்க மறுத்துவிட்டது. இதனால், சுவிஸ் குடும்பத்தினர் அந்தக் வெண்கலக் கிண்ணத்தின் மதிப்பு தெரியாமல் அதில் டென்னிஸ் பந்துகளைப் போட்டு வீட்டிலேயே அலங்காரமாக வைத்துள்ளனர்.

இந்தக் கிண்ணத்தைப் பற்றி இடைத்தரகர்கள் மூலம் கேள்விப்பட்ட ஜூரிச் நகரைச் சேர்ந்த ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் அக்குடும்பத்தினரிடம் இருந்து வெண்கலக் கிண்ணத்தை வாங்கியது. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த வெண்கலக் கிண்ணத்தின் மதிப்பு ஏல நிறுவனத்துக்கு தெரிந்திருந்தது. அதுபற்றி விளம்பரம் செய்து ஹாங்காங்கில் ஏலம் விட்டது. இதில் அந்தக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம் போனது. இத்தகவலை ‘கொல்லெர்’ ஏல நிறுவனம் அந்த வெண்கலக் கிண்ணத்தின் படத்துடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x