Published : 07 Jan 2019 11:36 AM
Last Updated : 07 Jan 2019 11:36 AM

பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து கணவர் தாக்கிய செய்தி உண்மையல்ல!

பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவியின் காலைப் பார்த்த கணவர், நிஜ பாம்பு என நினைத்துத் தாக்கியதாக ஒரு செய்தி, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி வருகிறது. பல செய்தி இணையதளங்களிலும் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தான் சமூகமொன்றின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியில், பாகிஸ்தானில் பெண் ஒருவர் பாம்பு போன்ற சாக்ஸ் அணிந்திருந்ததாகவும் இது தெரியாத கணவன், பாம்பு என்று நினைத்து அடித்ததில் அந்த பெண்ணின் கால் உடைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி உண்மையா பொய்யா என்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே, பெண்கள் உடையைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், மனைவி உறங்குவதைக் கூட கணவால் அடையாளம் காண முடியாதா என்று மற்றொரு சாராடும் வாதிட்டு வருகின்றனர்.

இந்த செய்தி பொய்யானது என்று தற்போது தெரியவந்துள்ளது. பெண் ஒருவர் பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்திருந்த புகைப்படமும், காலில் காயங்களுடன் கட்டு போட்டிருந்த புகைப்படமும் வெவ்வேறு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட படமாம்.

செய்திகளை வைரலாக்க வேண்டும் என்பதற்காக சமூக ஊடகங்களிலோ பொதுவெளிகளிலோ, மக்கள் போலியான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x