40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார்: ‘மீடியா’க்கள் கவனத்துடன் செய்தி வெளியிட வேண்டும் - உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார்: ‘மீடியா’க்கள் கவனத்துடன் செய்தி வெளியிட வேண்டும் - உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

உலகில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதொடர்பான செய்திகளை மீடியாக்கள் வெளியிடுவதால், அதை படித்து விட்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உலகளவில் தற்கொலை குறித்த ஆய்வறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து இந்நிறுவனத் தலைவர் மார்க்கரெட் சான் கூறியதாவது:

தற்கொலை தொடர்பான செய்தி களை மீடியாக்கள் அதிகமாக வெளியிடு வதால், அதை பார்த்து தற்கொலைக்கு முயற்சிக்கும் எண்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்கொலைகளைத் தடுக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

தற்கொலையால் குடும்பத்தினர், நண்பர்கள், சமூகம் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமுதாயத்தின் மிகப்பெரும் பிரச்னையாக தற்கொலை உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு மார்க்கரெட் சான் கூறினார்.

மொத்தம் 172 நாடுகளில் தற்கொலைகள் குறித்த விவரங்களை திரட்டி இந்த ஆய்வறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வருவாய் அதிகமுள்ள நாடுகளில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த வட கொரியா, இந்தியா, இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் தற்கொலை செய்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பூச்சி மருந்து குடித்தும், தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்வது உலகளவில் அதிகமாக உள்ளது. ஆசிய நாடுகளின் நகர்ப்புறங்கில் பல அடுக்குமாடி கட்டிடங்களில் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

உலகளவில் பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகளால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஏழை நாடுகளில் மருத்துவ வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in