

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டரஸ் இம்மாத இறுதியில் தனது பணியிலிருந்து விடைபெற இருக்கிறார்.
வெள்ளை மாளிகை அலுவலகத்தில் ட்ரம்பின் ஆரம்ப காலம் முதல் ஆலோசகராகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராகவும் இருந்த சாரா சாண்ட்ரஸ் ஜூன் மாத இறுதியில் பணியிலிருந்து விடைபெற இருக்கிறார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பணியிலிருந்து விடைபெறுவது குறித்து சாரா கூறும்போது, ”எனக்கு வழங்கப்பட்ட பணி என் வாழ் நாள் முழுவது எனக்கு அளிக்கப்பட்ட கவுரவம். நான் தற்போது எனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நான் பணிபுரிந்த அனைத்து நேரத்தையும் விரும்பினேன். எனது துயர நாட்களையும் சேர்த்துதான்” என்றார்
சாரா விடைபெறுவது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா” என்று பதிவிட்டுள்ளார்.