Published : 01 Jun 2019 10:14 AM
Last Updated : 01 Jun 2019 10:14 AM

ட்ரம்ப் பேச்சுவார்த்தை தோல்வியால் ஆத்திரம்: சொந்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய வடகொரிய அதிபர்

அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பேச்சுவார்த்தையின் போது சரியாக செயல்படவில்லை என்ற காரணத்துக்காக வட கொரியா அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது கிம்முக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் உள்ளிட்ட வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீது தேச துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது, மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஷின் ஹே யாங் என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x