தன்பாலின திருமணத்துக்கு ஈக்வடார் ஒப்புதல்

தன்பாலின திருமணத்துக்கு ஈக்வடார் ஒப்புதல்
Updated on
1 min read

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தன் பாலின ஈர்ப்பாளர் திருமணத்துக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாரம்பரியமான கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் அதிகம் கொண்ட தென் அமெரிக்க  நாடு ஈக்வடார். இந்த நிலையில் புதன்கிழமை ஈக்வடாரின் உச்ச நீதிமன்றம் தன்பாலின திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பாக நியமிக்கப்பட்ட அமர்வில் இடப்பெற்றிருந்த நீதிபதிகள் 9 பேரில் 5 பேர் தன்பாலின திருமணத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, “ இந்த தீர்ப்பு மூலம் ஈக்வடார் சமத்துவ நாடு என்பதை அர்த்தமாக்கியுள்ளது. இது கடந்த காலத்தை இருந்தத்தைவிட அதிகமாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தன்பாலின ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.முன்னதாக ஆசியாவிலேயே முதல்முறையாக தைவானில் தன்பாலின திருமணத்திற்கான மசோதாவுக்கு அந்நாடு கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டே தைவான் நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த உத்தரவிட்டது. இந்த நிலையில் தைவானில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண மசோதா அங்கு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in