Published : 14 Jun 2019 01:38 PM
Last Updated : 14 Jun 2019 01:38 PM

நீதிமன்றத்தில் சிரித்த கிறைஸ்ட் சர்ச் குற்றவாளி: தன் மீதான 92 குற்றச்சாட்டுகளை மறுத்தார்

நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் கொலை வழக்கில் தன் மீதான 92 குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கைது செய்யப்பட்ட பிரெண்டன் டாரன்ட் நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்.

நியூஸிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த  மார்ச் மாதம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில்  51 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சி ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை மேலாதிக்கம் எண்ணம் கொண்ட  பிரெண்டன் டாரன்ட் என்பவர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது 92 குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை  நீதிமன்றத்தில் பிரெண்டன் டாரண்ட் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதில் 80 கலந்து கொண்டனர்.

தன் மீது சுமத்தப்பட்ட 51 கொலை குற்றத்தையும், கொலை முயற்சி குற்றத்தையும் பிரெண்டன் டாரண்ட் மறுத்திருக்கிறார். மேலும் அவர் நீதிமன்றத்தில் சிரித்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெண்டனுக்கு மனநலத்தில் எந்த பாதிப்பு இல்லை என்று நீதிமன்ற தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கிறைஸ்ட் சர்ச் மசூதி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்று கூறும்போது, “இது அவர் மிருகம் என்பதை காட்டுகிறது. ஒருவர் மனித தன்மையே இல்லாமல் இருக்க முடியும் என்பதை பார்த்து நான் வருகிறேன். அந்த  நபர் நீதிமன்றத்தில் சிரிக்கிறார். அவர் தைரியமானவர் என்று நினைக்கிறார். உண்மையில் அவர் ஒரு கோழை. “ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x