

பாகிஸ்தானில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் நேரலையின்போது சிறப்பு விருந்தினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் 'நியூஸ் லைன் வித் அஃப்தாப்' என்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த மஸ்சூர் அலிக்கும், கராச்சி பத்திரிகை சங்கத் தலைவர் இம்தியாஸ் கானுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் அடிதடி சண்டையில் முடிந்தது.
இதில் மஸ்சூர் அலி, இம்தியாஸ் கானைத் தாக்கினார்.இந்தக் காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
பேசிக் கொண்டிருக்கும்போது தாக்குதலில் ஈடுபட்ட மஸ்சூர் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில பகிரப்பட்டு வருகிறது.