இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தேவாலாயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு  தேவாலாயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
Updated on
2 min read

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் மனித வெண்டுகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக   தேவாலாயத்தில் சென்று மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரமதர் மோடி இருநாட்கள் பயணமாக மாலத்தீவு, இலங்கைக்குச் சென்றுள்ளார். மாலத்தீவுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றி, அந்நாட்டு அதிபர் முகமதுசுலேஹ் உடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்தார்.

மாலத்தீவுகளில் இருந்து இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு நகருக்கு விமானம் மூலம் வந்தார். அவரை விமானநிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார்.

அதன்பின் அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள புனித அந்தோனி தேவாலாயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " அதிபர் மாளிகைக்குச் செல்லும் முன் பிரதமர மோடி கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோனி தேவாலயத்தில் சென்று மலர்செண்டு வைத்து ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தினார். இலங்கையுடன் சேர்ந்துஇ இந்தியா தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் " எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், " இலங்கை மீண்டு எழும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கோழைத்தனமான செயல்கள் இலங்கையின் உத்வேகத்தை தோற்கடிக்க முடியாது. இலங்கையுடன் எப்போதும் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் " எனத் தெரிவித்தார்.

அதன்பின் அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வந்தபோது சேலாக மழை தூறியதால், அவருக்கு குடைபிடித்து அழைத்துவந்தனர்.  அதன்பின் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி அசோக மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார்.

இதுகுறித்து இந்தியவெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " மழைவந்தாலும், வெயில் அடித்தாலும் உங்களுடன் இருப்போம். கொழும்பு அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது " எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் மைத்திரி சிறிசேனா அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதை முடித்தபின், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபரி சிறிசேனா, எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சே ஆகியோருடன் பேச்சு நடத்த உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in