Published : 14 Jun 2019 04:47 PM
Last Updated : 14 Jun 2019 04:47 PM

ஷாங்காய் மாநாட்டில் தலைவர்களுக்கு மதிப்பளிக்காமல் மரபுகளை மீறி அமர்ந்த இம்ரான் கான்: வீடியோ காட்சி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மரபுகளை மீறி இருக்கையில் அமர்ந்து இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்ஷெக் நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுதவிர பார்வையாளர்களாக உள்ள ஆப் கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடு களின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜின்பெக்கோவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் தொடக்க விழாவில் தலைவர்கள் பங்கேற்க வந்தபோது, ஒவ்வொருவரும் மற்றவர்கள் வந்து சேரும் வரை காத்திருந்து பின்னர் மொத்தமாக அமர்ந்தனர்.

இந்த நடைமுறைக்கு மாறாக இம்ரான்கான் நேராக சென்று தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து அதை உணர்ந்தவராக எழுந்து நின்ற அவர் மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இம்ரான் கான் சார்ந்துள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோலவே, அண்மையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியா சென்றபோதும் இம்ரான்கான் மரபுகளை மீறி சவூதி மன்னரிடம் பேசிய இம்ரான்கான்,அவரது மொழிபெயர்ப்பாளரிடம் பேசினார். மேலும் தான் கூறியதை மொழிபெயர்ப்பாளர் மன்னரிடம் எடுத்துரைப்பதற்கு முன்னரே இம்ரான்கான் புறப்பட்டுச் சென்றார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x