

துருக்கியில் மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமியை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
இதுகுறித்து துருக்கி ஊடகங்களில் , ''துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வியாழக்கிழமையன்று இரண்டாவது மாடியிலிருந்து சிறுமி ஒருவர் தவறி கீழே விழ அவரை அங்கு இளைஞர்களுடன் நின்றுகொண்டிருந்த 17 வயது ஃபூயுசி சபாத் என்ற இளைஞர் சாதுர்யமாகக் காப்பாற்றினார். இதனால் அந்தச் சிறுமி காயமின்றித் தப்பினார்'' என்று செய்தி வெளியானது.
இந்தக் காட்சி அங்கு அருகிலிருந்த வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் வெளியானதைத் தொடர்ந்து சிறுமியைக் காப்பாற்றிய இளைஞர் பரவலாக அனைவராலும் பாராட்டப்பட்டார்.