

ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் புலப்பெயர்ந்தவர்கள் முகாம்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போஸ்னியா போலீஸார் தரப்பில், “ போஸ்னியாவில் உள்ள வெளிகா நகரில் புலப்பெயர்ந்தவர்கள் குடியிறுப்புப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முகாமில் இருந்தவர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பித்தனர்.
இதில் 29 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
கடந்த வருடம் ஆசியா, வட ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 6,000 பேர் போஸ்னியாவுக்கு அகதிகளாக நுழைந்ததாக போஸ்னியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.