

டைம்ஸ் சதுக்கத்தைத் தாக்க திட்டமிட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''அஷ்குல் அலம் என்ற 22 வயது இளைஞர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அமெரிக்காவின் புகழ்மிக்க டைம்ஸ் சதுக்கத்தைத் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்காக அலம் ஆயுதங்களையும் வாங்கி வைத்திருக்கிறார் என்றும் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் லேசர் அறுவை சிகிச்சை செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்'' என்றும் செய்தி வெளியானது.
இது தொடர்பாக நிறைய விசாரிக்க வேண்டி இருக்கிறது என்றும் அலாம் தான் சண்டையிட்டு இறக்க விரும்பியதாகக் கூறியதாவும் எஃப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.