

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் வயல்களை குறிவைத்து அமெரிக்க விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 20-க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனர்.
இராக்கை அடுத்து சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா கடந்த 3 நாட்களாக வான் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று தாக்குதல் தீவிரமடைந்தது. தீவிர வாதிகளின் நிதி ஆதாரத்தை முடக்கும் வகையில் அவர்கள் பிடியில் உள்ள எண்ணெய் வயல் கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் சுமார் 20-க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர். இதில் 14 பேர் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வர்கள் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களாவர். எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியபோதும் ஒரு சில குண்டுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததாகத் தெரிகிறது.
அப்பகுதியில் தாக்குதல் தொடரும் என்ற அச்சத்தில் அங்கிருந்து மக்கள் வெளியேறி விட்டனர். சுமார் 3 ஆண்டுகளாக சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் சுமார் 4 எண்ணெய் வயல்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர். அவற்றில் இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்து தங்க ளது நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொண்டனர். இப்போது அந்த எண்ணெய் வயல் கள் அழிக்கப்பட்டுள்ளன.
சிரியாவில் அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், தங்கள் பிடியில் இருந்த சுமார் 150 பேரை தீவிரவாதிகள் விடுவித் துள்ளனர்.
தீவிரவாதிகள் அமைத்திருந்த பயிற்சி மைதானங்கள், வாகனசோதனைச் சாவடிகள், அவர்களது வாகனங்கள் ஆகியவை மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி அழித்த வருகின்றன. கிழக்கு சிரியா, துருக்கி, இராக் எல்லைப் பகுதி யில் இத்தாக்குதல்கள் நிகழ்த் தப்படுகின்றன. தீவிரவாதிகளின் பின்னடவை பயன்படுத்தி சிரியா அரசு ராணு வத்தினர் அத்ரா நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.