Published : 20 Jun 2019 04:48 PM
Last Updated : 20 Jun 2019 04:48 PM

வரலாற்று சுற்றுப் பயணமாக வடகொரியா சென்றடைந்தார் ஜி ஜின்பிங்

வரலாற்று சுற்றுப் பயணமாக வடகொரியா சென்றடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அந்நாட்டு அதிபர் கிம் வரவேற்றார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று ( வியாழக்கிழமை) வடகொரியா சென்றடைந்தார். இதன் மூலம் வடகொரியா போன்ற தனிமைப்படுத்தப்பட்ட நாட்டிற்கு கடந்த 14 ஆண்டுகளில் பயணம் செய்த முதல் சீன அதிபர் என்ற பெருமைக்கு உரியவராக ஜி ஜின்பிங் உள்ளார்.

வடகொரியா சென்றடைந்த ஜி ஜின்பிங்கை அதிபர் கிம் தலைநகரம் பியாங் கியாங்கில் உள்ள விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஜி ஜின்பிங்குடன் அவரது மனைவி பெங் லியுயான்,வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, மற்றும் பிற அரசு அதிகாரிகள் உடன் சென்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதல் நாள் சந்திப்பில் வழக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சினுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் அதிருப்தியில் இருந்த சீனா, அந்நாடு மீதான பொருளாதாரத் தடைகளை ஆதரித்தது. இதனால் இரு நாட்டு உறவில் சுமுகமான சூழல் இல்லாத நிலையில் கடந்த ஆண்டும் சீனாவுக்கும் கிம் ரகசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டது இரு நாடுகள் உறவில் இணக்கத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஜி ஜின்பிங் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணத்துக்கு முன்னதாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் கொரிய தீபகற்பகத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு சீனா தீவிரமான பங்களிப்பை அளிக்க முடியும் என்று ஜி ஜின்பிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x