

ஆண் செவிலியர் ஒருவர் தான் பணியாற்றிய இரு மருத்துவமனைகளிலும் அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 100 பேரைக் கொன்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இறுதிக்கட்ட விசாரணையை நெருங்கியுள்ளது.
நீல்ஸ் ஹெகோல் (42) என்பவர் 1999 மற்றும் 2002க்கு இடைப்பட்ட காலங்களில் ஓல்டன்பர்க்கிலுள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய ஏராளமான நோயாளிகளைக் கொன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானது.
அது மட்டுமின்றி நீல்ஸ் ஹெகோல், 2003லிருந்து 2005 வரை டெல்மன்ஹாரில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலகட்டங்களிலும் மொத்தம் ஏராளமான நோயாளிகளைக் கொன்றுள்ளார்.
நீல்ஸ் ஹெகோல் இதுவரை 100 பேரைக் கொன்று குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவ்வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீல்ஸுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கவேண்டுமென்று கோரினர்.
இவ்விசாரணை கடந்த 7 மாதங்களாக நீடித்து வந்தது. அச்சமயத்தில் 43 கொலைகளை மட்டும் செய்ததாக நீல்ஸ் ஹெகோல் ஒப்புக்கொண்டார். இதில் 5 கொலைகள் தான் செய்யவில்லை. அது சர்ச்சைக்குரியது என்றும் கூறிய நீல்ஸ் ''மேலும் 52 பேரைக் கொன்றதாக ஞாபகம் எதுவும் இல்லை'' என்றும் விசாரணையின்போது தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று முடிவடைந்தது.
இவ்விசாரணையின்போது, ஜெர்மனிய நீதித்துறை நடைமுறையில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் தன்னுடைய இக்கொலைச் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக நீதிபதிகளிடம் பதிலளிக்கையில் நீல்ஸ் ஹெகோல் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட ஒரு நோயாளியின் தாத்தா கிறிஸ்டியன் மார்பேக் பாதிக்கப்பட்டவர்களின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டுவருகிறார். அவர் டிபிஏ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ''ஹோகேல், தான் செய்த குற்றங்கள் குறித்து ஏற்கெனவே என்ன சொன்னாரோ அதை மட்டுமே மீண்டும் ஒப்புக்கொண்டார்'' என்றார்.
இவ்வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு நாளை (வியாழன்) எதிர்பார்க்கப்படுகிறது.