

ஹார்மஸ் கடற்பகுதிக்கு அருகே இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியது ஈரான் தான் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அணுஆயுத சோதனை ஒப்பந்த மீறலில் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் வளைகுடா பகுதியில் தொடர்ந்து எண கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
அந்த வகையில் வியாழக்கிழமை ஹர்மஸ் கடற்பகுதியில் (உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய நீர்வழி ) இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியது ஈரான் தான் என்று அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தரப்பில், “ ஈரான் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப் பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் ஒரே மாதிரியாக உள்ளது” என்றார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கூட்டத்தில் ஈரானின் இந்தத் தாக்குதல் குறித்து குரல் எழுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரான ஜோனந்தனிடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாப்பியோ கேட்டுக் கொண்டுள்ளார்.