

ஹார்மஸ் கடற்பகுதிக்கு அருகே எண்ணெய் கப்பல்களை தாக்கியது ஈரான்தான் என்ற குற்றாச்சாட்டை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “கல்ஃப் ஆப் ஓமன் பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க ஈரான் மீது ஆதாரமின்றி குற்றம் சுமத்தி இருக்கிறது.
ஈரான் தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவியது. எங்களால் முயன்ற வகையில் அந்த கப்பலிருந்த குழுவை காப்பாற்றினோம்” என்றார்.
முன்னதாக ஹர்மஸ் கடற்பகுதியில் (உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய நீர்வழி. ) வியாழக்கிழமை இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியது ஈரான் தான் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.