

வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை நேற்று தொடங்கியது.அறக்கட்டளை பெயரில் நிதி மோசடி செய்தது, ஆதரவற்றோர் இல்லத்துக்கு சேர வேண்டிய நிதியை அபகரித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை ரத்து செய்யக்கோரி அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் கலிதா ஜியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை தொடங்கியது.