Published : 03 Mar 2018 09:03 AM
Last Updated : 03 Mar 2018 09:03 AM

உலக மசாலா: விநோத விடுதி!

சி

ங்கப்பூரில் இருக்கும் மாரியட் டாங் ப்ளாசா தங்கும் விடுதியில் வித்தியாசமான கோரிக்கையை வைக்கிறார்கள். அங்கே தங்குவதற்கு அனுமதி கேட்கும்போதே, தங்கும் அறையின் படுக்கைக்கு அருகே ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்த ஜெஃப் கோல்ட்ப்ளம் நடிகரின் படம் வைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். அதற்குச் சம்மதிப்பவர்களுக்கே விடுதியை அளிக்கிறார்கள். தங்க வருபவர்கள் ஆச்சரியமடைகிறார்கள். அறைக்குள் நுழைந்தவுடன் சுவர், படுக்கைக்கு மேல், தொலைக்காட்சி பெட்டி, தலையணை உறை, குளியலறை என்று எங்கு பார்த்தாலும் ஜெஃப் வெவ்வேறு விதமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார்! ‘ஜெஃப் கோல்ட்ப்ளம் எலியட்டை வரவேற்கிறார்’ என்று தங்குபவரின் பெயருடன் வரவேற்பு வாசகமும் வைக்கப்பட்டிருக்கும். “எங்கள் விடுதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். அவர்களின் அத்தனை தேவையையும் எதிர்பார்ப்பையும் வசதியையும் நாங்கள் வழங்கிவிடுவோம். வாழ்நாள் முழுவதும் விடுதியை நினைவில் வைத்துக்கொள்வதற்காக இந்தப் படங்களை அறை முழுவதும் வைத்திருக்கிறோம்” என்கிறார் விடுதியின் இயக்குநர்களில் ஒருவரான டேனியல் பர்ஸ்டீன்.

விநோத விடுதி!

ங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது ஜுனைத் அஹமது, மாடலாக இருக்கிறார். தினமும் 3 மணி நேரம் செலவு செய்து, 200 ஒளிப்படங்களை எடுக்கிறார். அவற்றிலிருந்து மிகச் சிறந்த சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். ‘செல்ஃபி கிங்’ என்று அழைத்துக்கொள்ளும் இவரை, 50 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். வாரம் ஒருமுறை ஃபேஷியல் செய்கிறார், புருவங்களைத் திருத்திக்கொள்கிறார். தினமும் விதவிதமாக ஒப்பனை செய்துகொள்கிறார். கடந்த ஆண்டு மட்டும் பற்கள், புருவங்கள், உதடு, கண்கள், தலை என்று அழகுக்காகப் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். “சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாம் கவனிக்கப்பட வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும். ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் போட்ட முதல் நிமிடத்தில் 100 பேர் விருப்பக்குறி இட்டிருப்பார்கள். என் ஸ்மார்ட்போனில் விருப்பக்குறியிடுபவர்களின் தகவல் வந்துகொண்டே இருக்கும். ஒரு படம் வெளியிட்டு குறைந்தது 500 விருப்பக்குறிகளாவது இருந்தால்தான் அந்தப் படத்தைத் தொடர்ந்து வைத்திருப்பேன். அதைவிடக் குறைவாக இருந்தால் படத்தை நீக்கிவிடுவேன். ஓராண்டுக்கு முன்புவரை நான் இயற்கையாகவே இருந்தேன். ஆனால் சமூகவலைதளங்கள் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் விளைவால் இப்படி என்னை மேம்படுத்திக்கொண்டேன். பெரும்பாலானவர்கள் என் முயற்சிகளைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மாற்றத்துக்கும் நிறைய உழைப்பு, நேரம், பணம், வலி எல்லாம் தேவைப்படுகிறது. இதைப் புரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். என்னை விமர்சிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். நான் இயற்கையாக இருந்தபோது பள்ளியிலும் கல்லூரியிலும் என் உருவத்தைக் கிண்டல் செய்தவர்களிடம் உங்கள் விமர்சனத்தைக் காட்டுங்கள்” என்கிறார் ஜுனைத் அஹமது.

அளவுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ஆபத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x