Published : 13 Mar 2018 09:34 am

Updated : 13 Mar 2018 09:34 am

 

Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM

உலக மசாலா: வைரலான சிகை அலங்காரம்

ஷ்யாவைச் சேர்ந்த வாலண்டீனா பெட்ரென்கோ செனட்டராக இருக்கிறார். அன்றைய சோவியத் ஒன்றியத்திலும் இன்றைய ரஷ்யாவிலும் அரசியல்வாதியாகப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரது சிகை அலங்காரம் சமீபகாலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் எண்ணிலடங்காத மீம்கள் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. தற்போது இவரது சிகை அலங்காரம் உலக அளவில் பரபரப்பாகிவிட்டது. தொப்பிபோல் எப்படிச் சிகை அலங்காரம் செய்யமுடிகிறது? முடிக்குள் என்ன இருக்கிறது என்றெல்லாம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. “எனக்குச் சுருள் முடி. அதைக் கொஞ்சம் மேலே தூக்கி, கொண்டை ஊசிகளைச் செருகி வைத்திருக்கிறேன். இதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை. நான் நீண்டகாலமாக அரசியலில் இருந்து வருகிறேன். என் பணிகள், என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தால் அதை ஆரோக்கியமான விஷயமாகக் கருதுவேன். சிகை அலங்காரத்தை வைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் ஏதாவது பயன் இருக்கிறதா? நேரம்தான் விரயமாகிறது” என்கிறார் வாலண்டீனா. “எது செய்தாலும் மீம் போடும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாலண்டீனாவைச் சந்திப்பவர்கள் கூட அவரது கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை. சிகையைத்தான் பார்க்கிறார்கள். உடனே அது குறித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படித் தனித்துவமான சிகை அலங்காரம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. எனக்கே கூட வாலண்டீனா என்றதும் அவரது சிகை அலங்காரம்தான் நினைவுக்கு வருகிறது. இதை அவர் இயல்பாகச் செய்திருக்கிறாரா, அல்லது பிறரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காகச் செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை. இவரது சிகை அலங்காரத்தாலும் உடையாலும் பெண் தன்மை குறைந்து காணப்படுகிறது. இதற்காகக் கூட இவர் இப்படிச் செய்துகொள்ளலாம்” என்கிறார் அனஸ்டாசியா வோலோச்கோவா.

தமிழர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் என்ன ஓர் ஒற்றுமை!

ஸ்

மார்ட்போனுக்கு அடிமையாகுதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் சராசரி யாக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு 80 தடவை போனை எடுத்துப் பார்க்கிறார்கள். இந்தப் பழக்கம் நம் மூளையைப் பாதிப்பதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அதிலும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கிறார்கள். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஜோ ஹோலியரும் காய் டாங்கும் சேர்ந்து ‘லைட் போன் 2’ என்ற போனை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், அலாரம் வைத்துக்கொள்ளலாம். இவற்றைத் தவிர வேறு எந்த வசதியும் இதில் கிடையாது. இந்த போனைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மிச்சமாகிறது, மூளை பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. ஆரம்ப கால போனின் வசதியுடன் ஸ்மார்ட்போனைப்போல் எடை குறைவாக இருக்கும் இந்த போனின் விலை சுமார் 26 ஆயிரம் ரூபாய்!

ஸ்மார்ட்போனைவிட விலை அதிகமாக இருந்தால் யார் வாங்குவார்கள்?

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author