Published : 28 Mar 2018 08:39 AM
Last Updated : 28 Mar 2018 08:39 AM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செல்வாக்கு அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் செயல்பாடு குறித்து சிஎன்என் தொலைக்காட்சி கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பெரும்பாலானோர் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இருந்தாலும், அதிபராக பதவியேற்ற 100 நாட்களில் இருந்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது ட்ரம்பின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக 42% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 54% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பரில் ட்ரம்புக்கு ஆதரவாக 35 % பேரும் ஜனவரியில் 40 % பேரும் கருத்து தெரிவித்தனர். பிப்ரவரியில் மீண்டும் அவரது செல்வாக்கு 35 % ஆனது. இப்போது அது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 11 மாதங்களில் ட்ரம்பின் செல்வாக்கு சதவீதத்தில் இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x