Last Updated : 22 Sep, 2014 03:12 PM

 

Published : 22 Sep 2014 03:12 PM
Last Updated : 22 Sep 2014 03:12 PM

இணையத்தில் மீண்டும் அந்தரங்க படங்கள் கசிவு: நடிகை கிம் கர்தாஷியன் கொந்தளிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகைகளின் 50-க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் 2-ஆவது முறையாக இணையத்தில் ஹேக்கர்களால் கசியவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகளின் 50-க்கும் மேற்பட்ட அந்தரங்க படங்களை 4சான் என்ற இணையதளத்தின் வழியாக ஹேக்கர்கள் திருட்டுத்தனமாக கசியவிட்டனர். பின்னர் 'ரெடிட்' இணையதளத்தில் இந்தப் படங்கள் பரவியதாக 'டெய்லி பீஸ்ட்' நிறுவனம் செய்தி வெளியிட்டது.

பாப் பாடகி ரிஹானா, மாடலும் டிவி நடிகையுமான கிம் கர்தாஷியன், காப்ரியேல் யூனியன், மேரி-கேட் ஓல்சென், ஹோப் சோலோ ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானதால் ஹாலிவுட் வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது.

இரண்டாவது முறையாக இந்த முறைகேடு ஏற்பட்டுள்ளதால் ஹாலிவுட் நட்சத்திரங்கள் அனைவருமே தங்களது பழைய கோப்புகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், இந்த முறை ஹேக்கர்கள், கடந்த மாதம் வெளியிடாத சில ஜெனிஃபர் லாரண்ஸின் அந்தரங்க படங்களும், 'டிஸ்னி' புகழ் குழந்தை நட்சத்திரங்களின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக ரெடிட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து நடிகை கிம் கர்தாஷியன் கூறும்போது, "இந்தத் திருட்டு வேலையை செய்தவர்கள் சரியான கழுகுகள். எல்லோரும் விழித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட, பலர் வேலையினேறி அலைகின்றனர்" என்று கொந்தளித்துள்ளார்.

அதே போல காப்ரியேல் யூனியன் தனது கணவர் ட்வேண் வேடுடன் இணைந்து வெளியிட்டுள்ள கண்டனத்தில், "உலக முழுவதிலும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. இதில், எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் ஆளப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக அந்தரங்க புகைப்படங்கள் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு மையத்திடம் அவரது தரப்பில் சட்ட வல்லுநர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஜெனிபர் லாரன்ஸ், கதே அப்டான், எலிசபெத் வின்ஸ்டெட், கிம் கர்த்ஷியன், செலீனா கோமெஸ், விக்டோரியா ஜஸ்டிஸ் என 100-க்கும் அதிகமான பிரபல ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி அதி வேகத்தில் இணையத்தில் பரவியதால், சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x