

ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதை கைது செய்யக் கூடாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்குத் தடை விதித்துள்ளது.
ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் வைக்கக் கூடாது, அடுத்த உத்தரவுகள் வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்று லாகூர் உயர் நீதிமன்றம் பஞ்சாப் மாகாண அரசு மற்றும் பாகிஸ்தான் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசும், பஞ்சாப் மாகாணமும் என்னை கைது செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கலாம் எனவே இதனை ஏற்கக் கூடாது என்று லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஹபீஸ் சயீத் செய்திருந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனுதாரரின் புகார்களுக்கு அரசு பதிலளிக்கவும் லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி இவர் என்று அமெரிக்கா, ஐநா, இந்தியா ஆகிய நாடுகள் அறிவித்ததையடுத்து அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.