Published : 25 Mar 2018 10:53 AM
Last Updated : 25 Mar 2018 10:53 AM

பசிபிக் கடலில் குவியும் குப்பைகள்: ஆய்வறிக்கையில் தகவல்

நெதர்லாந்தை சேர்ந்த‘தி ஓஷன் கிளீன்அப்பவுன்டேஷன்’, 6 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பசிபிக் கடலில் குவிந்து வரும் குப்பைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களின் ஆய்வறிக்கை ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதில், ‘‘பசிபிக் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள், மீன்பிடி வலைகள் என சுமார் 80 ஆயிரம் டன்னுக்கு அதிகமான குப்பைகள் மிதக்கின்றன. இவை 500 ஜம்போ ஜெட் விமானங்களின் எடைக்கு சமம். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளின் பரப்பளவைவிட அதிகமாக பசிபிக் கடலில் குப்பைகள் பரவியுள்ளன. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். கடலின் தூய்மையைப் பாதுகாக்க மீனவர்கள், சரக்கு மற்றும் பயணிகள் கப்பலில் செல்வோரிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x