Published : 31 May 2019 12:40 PM
Last Updated : 31 May 2019 12:40 PM

எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: ஈரான்

அரபு நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் மிது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக கூற,ி அதனை ஈரான் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவுசாசி கூறும்போது, “ அரபு நாடுகள் கூட்டமைப்பில் சில அரபு தேசங்கள் வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இவை சவுதியின் முயற்சியால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக வைக்கும் ஆதரமற்ற குற்றச்சாட்டின் ஒரு பகுதி” என்றார்.

முன்னதாக ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப் பெரிய மையம் இருக்கிறது. இங்கு கடந்த 13-ம் தேதி 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும்  தெரிவித்தன.

இந்தத் தாக்குதலுக்கு நேரடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அமெரிக்காவும்  மத்தியக் கிழக்கு நாடுகளும் இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கிறது என்று குற்றம் சாட்டினர்.

ஆனால், ஈரான் இதனை மறுத்துவிட்டது. இதுவரைக்கும் யார் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று தெரியாத நிலையில், “தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான்தான் உள்ளது. யார் இதை நடத்தி இருக்க முடியும்?

நேபாளத்திலிருந்து யாராவது நடத்தி இருப்பார்களா? அமெரிக்காவுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை. எங்களுக்கு யார் நடத்தி இருக்கிறார்கள் என்று நன்கு தெரியும். இதில் முக்கியமானது என்னவென்றால் எங்களுக்குத் தெரியும் என்பது ஈரானுக்குத் தெரிய வேண்டும் என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - ஈரான் மோதல்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்ற ட்ரம்ப்  ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்தநிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x