காங்கோவில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

காங்கோவில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி
Updated on
2 min read

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ஏரி ஒன்றை கடக்க முற்பட்டபோது படகு விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பயணம் செய்த ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு நடந்த இச் சம்பவம் குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிஓ வெம்பா, ஏஎப்பி உள்ளிட்ட ஊடகங்களிடம் தெரிவித்த விவரம்:

காங்கோவிலிருந்து ஏராளமான பயணிகளையும் சரக்குகளையும் அளவுக்குமீறீ ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. இப்படகில் 350 பேர் ஏற்றிச் சென்றுள்ளனர். இதில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ளது. இதுவரை 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 12 பெண்கள், 11 குழந்தைகள் மற்றும் 7 ஆண்கள்.

இந்த எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது.

இப்பயணிகள் யாவரும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு குடியேற முயற்சிப்பவர்கள். பொதுவாக இப்பயணிகள் நீர்வழிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே இங்கு விபத்துக்கள் சாதாரண ஒன்றாக ஆகியுள்ளது.

பெரும்பாலானா காங்கோ மக்களுக்கு நீந்தவும் தெரியாது; ஆபத்தான படகுப் பயணத்தின்போது அணியவேண்டிய உயிர்காக்கும் ஜாக்கெட்டுக்களையும் இவர்கள் அணிவதில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

இவ்வாறு இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிஓ வெம்பா, தெரிவித்தார்.

தொடரும் படகுவிபத்துக்கள்

கடந்த மாதம் இத்தகைய படகு விபத்துக்கள் இருமுறை நடந்தது. இதில் பயணம் செய்த 167 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவங்களினால், படகுப் பயணங்கள்

மேற்கொள்பவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுக்கள் மட்டுமின்றி லைப்புயாஸ் எனப்படும் சிகப்புவண்ண டியூப்மிதவைகளும் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் பெலிக்ஸ் ஷிசேகிடி கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படகு மூழ்கியதாக இருபத்தி ஏழு பேர் மூழ்கியுள்ளனர். கடந்த ஜூலை 26, அன்று நடந்த மற்றொரு விபத்தில் 50 கடந்த மே மாதம் 50 பேரும், மற்றும் ஏப்ரல் மாதம் 40 பேரும் நீரில் மூழ்கி போராடி உயிரைவிட்டனர்.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்நாட்டு சண்டைகளால் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. மேலும் மத்திய அரசு அமைந்துள்ள கின்ஷாசா நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகள் அரசின் கட்டுப்பாடு பலவீனமாக உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் நாட்டிலிருந்து வெளியேறிச் செல்ல முயன்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in