Published : 15 May 2019 07:12 AM
Last Updated : 15 May 2019 07:12 AM

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு தடை: துப்பாக்கிச்சூடு நடத்த ராணுவத்துக்கு அனுமதி

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் உட்பட 3 அமைப்புகளுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கை தலைநகர் கொழும்பு, நீர்க்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற் றது. இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் ஐஎஸ்ஐஎஸ் உடன் இணைந்து தாக்கு தலை நடத்தியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்தப் பின்னணியில் கடந்த ஞாயிற் றுக்கிழமை நள்ளிரவில் வடமேல் மாகா ணத்தின் பல்வேறு நகரங்கள், கிராமங் களில் மசூதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கடை கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத் தப்பட்டது. இந்தக் கலவரத்தில் கொட்டார முல்லவை சேர்ந்த தொழிலாளி அமீர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர். இதில் சிலரின் நிலைமை மோசமாக உள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. சமூக வலைதளங் களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊர டங்கு நேற்று தளர்த்தப்பட்டது. வடமேல் மாகாணத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையும் நாட்டின் இதர மாகாணங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கலவரத்தை ஏற்படுத் தியதாக மகாசோஹேன் பலகாய என்ற அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, ஊழல் எதிர்ப்பு முன்னணி இயக்குநர் நாமல் குமார, நவசிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களை தவிர முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு நிறுவனங் கள் நேற்று செயல்படவில்லை. கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக் கிச்சூடு நடத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தவுடன் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதய மில்லதே இப்ராஹிம், விலாத் அஸ் செயிலானி ஆகிய 3 அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. இந்த தடையை உறுதி செய்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட குளி யாப்பிட்டி பகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியபோது, "அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். நாளை வரை அவர் சீனாவில் முகாமிட்டிருப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x