

இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் தடை செய்யப்பட்ட இடங்களில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
சித்திக்கி அஹமத் டேனிஷ், இவர் ராய்ட்டர்ஸ்க்காக இந்தியாவிலிருந்துகொண்டு செயல்பட்டுவரும் புகைப்பட பத்திரிகையாளர். இவர் நீர்க்கொழும்புவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அங்குள்ள மேலதிகாரிகளைப் பார்க்கவேண்டும் என்று கூறி வளாகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். பாதுகாவலர்கள் அனுமதி மறுத்தபிறகும் வலுக்கட்டாயமாக உள்ளே செல்ல முயன்றதால் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வித அனுமதியும் இன்றி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்ததாக சித்திக்கி மீது குற்றச்சாட்டு பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், இவர் நீர்க்கொழும்பு நீதிமன்றம் சித்திக்கியை மே 15ந் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் பள்ளிமாணவன் ஒருவரும் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக அப்பள்ளிக்குள் தடையைமீறி நுழைந்ததோடு மாணவனின் பெற்றோர்களிடமும் பேச்சுகொடுத்துள்ளார். அப்போது அப்பெற்றோர் போலீஸாருக்கு தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்பத்திரிகையாளர், இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டதிலிருநது அங்கே தங்கி செய்திகள் சேகரித்து வருவதற்காக அங்கே தற்காலிகமாக தங்கியுள்ளார்.