தஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 32 பேர் பலி

தஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 32 பேர் பலி

Published on

தஜிகிஸ்தான் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பலியாகினர். பலியானவர்களில் பலர் ஐஎஸ் சிறைக் கைதிகள்.

இதுகுறித்து தஜிகிஸ்தான் அமைச்சகம் கூறும்போது, ’’தஜிகிஸ்தானில் வாக்தட் நகரில் உள்ள சிறையில் ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கலவரமாகியது. கலவரத்தை அடக்கமுடியாத நிலையில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு  நடத்தினர்.

இந்தக் கலவரத்தில் 32 சிறைக் கைதிகள் பலியாகினர். பலியானர்வர்கள் பலர்  ஐஎஸ் தீவிரவாதிகள். இதில் பாதுகாவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கலவரத்திற்குத் தூண்டுதலாக இருந்தவர் தஜிகிஸ்தான் படைப் பிரிவின் தலைவராக இருந்த கல்முரட் காலிமொவ்வின் மகன் பெக்ரஸ் குல்மர்ட் என்று அந்நாட்டின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறையில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in